போலீஸ் பூத்தில் இருந்து ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரை டவுன் பகுதியைப் பரபரப்பிற்குள்ளாகியுள்ளது.
மதுரை மாநகரில் பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் வாகன போக்குவரத்து மற்றும் கணிக்கணிப்புகளை மேற்கொள்ள போலீஸ் கண்காணிப்பு பூத்து ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதிக்கு லோடு ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்த வேகத்தில் திடீரென அந்த பூத்துக்குள் நுழைந்துள்ளார். போலீசார் யாரும் பூத்துக்குள் இல்லாத நிலையில் உள்ளே புகுந்த அந்த நபர் கதவை தாழிட்டுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் பூதத்தின் மேல் பகுதியில் இருந்து புகை வெளிப்பட்டுள்ளது. பின்னரே உள்ள புகுந்த அந்த நபர் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டது தெரிந்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் போலீஸ் பூத்தின் பெரும்பான்மையான பகுதி எரிந்து சேதமானது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். முழுவதுமாக எரிந்த நிலையில் கிடந்த உடல் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த நபர் வந்த லோடு ஆட்டோவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பதற்காக ஸ்பீக்கர் கட்டி வைத்திருந்தது தெரிந்தது. அந்த ஆட்டோவில் செல்போனை ஒன்றும் இருந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார் அவர் யார் என்று விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த ஆட்டோ சிவநேசன் என்ற பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூத்தை ஒட்டியுள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி வருகின்றனர்.
பட்டப்பகலில் போலீஸ் பூத்துக்குள் புகுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/18/140-2025-12-18-18-23-09.jpg)