புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா மகன் விஸ்வநாதன் (32), கட்டுமானத் தொழிலாளி. இவர் தற்போது மாங்குடி கிராமத்தில் ஒரு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இன்று காலை விஸ்வநாதனும் பாலைவனம் கிராத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (52) ஆகிய இருவரும் மாங்குடி கிராமத்திற்கு சென்ற போது வழியில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து பறந்து கொண்டிருந்த கதண்டுகள் விரட்டி விரட்டி கடித்துள்ளது. படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது விஸ்வநாதன் இறந்துவிட்டது தெரிய வந்தது. ஆறுமுகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கதண்டுகள் கடித்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment