ரவுடி ஒருவர் கூட்டாளிகளாலேயே தலை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்ரத்தைச் சேர்ந்தவர் சிவமணி (27). மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிவமணி தனக்கு கீழ் பல்வேறு நபர்களை உருவாக்கி ரவுடிசம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தொடங்கிய கூட்டத்தில் உள்ளவர்களில் சிலரை சிவமணி மரியாதைக் குறைவாக நடத்தியதால் கூட்டாளிகளே சிவமணியை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/12/a4386-2025-07-12-10-53-07.jpg)
இந்நிலையில் அனைவரும் ஒன்றாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டு சிவமணி உட்பட ஆறு பேர் ஒரு காரில் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த சக கூட்டாளிகள் காருக்குள்ளேயே வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்து வத்தலக்குண்டு பகுதியில் எழில் நகர் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் உடலைப் போட்டு ஆத்திரம் தீராமல் கற்களை தூக்கிப்போட்டு தலையை கொடூரமாக சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவமணி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிவமணியை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி ஒருவர் கூட்டாளிகளாலேயே கொலை செய்யப்பட்டு தலை சிதைக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.