'A beacon of reason for the rise of the Tamil nation' - Tamil Nadu Chief Minister pays tribute to Periyar Photograph: (dmk)
செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஏஐ தொழிநுட்ப வீடியோவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!' என தெரிவித்துள்ளார்.
இன்று கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.