'A bad thing has happened that should not happen to any woman' - C.P. Radhakrishnan interview Photograph: (kovai)
கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு கொடூரம் கோவையில் நடந்துள்ளது. அதுவும் நம்முடைய கொங்கு மண்ணில் நடந்திருப்பது என்பது தாங்க முடியாது வேதனையைத் தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதும் காவல்துறையினுடைய பொறுப்பு. நிச்சயமாக காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புகிறேன். அந்த சகோதரிக்கும், அந்த பெண்ணினுடைய பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நடக்கக்கூடாது தான் சில நேரங்களில் தவிர்க்க இயலாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கின்ற அவர்களுக்கு நாம் என்றைக்கும் உறுதுணையாக நிற்போம்'' என்றார்.
Follow Us