கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் பகுதியில் பெற்ற தாயே பிறந்து  42 நாட்களான பச்சிளம் குழந்தையை டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி கொலை செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisment

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிடப்பதாக பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் குளத்தில் தலையில்லாமல் மிகுந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அடல் அழுகி இருந்ததால் உயிரிழந்து கிடந்தது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டறிவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. தலையைத் துண்டித்து குழந்தையை குளத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.