சீனாவில் ஹெனான் மாகாணத்தின் ஜெங்சோவில் 10 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுவனின் பெற்றோர்கள் ஏற்கனவே விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டனர். ஆனால், அந்த சிறுவன் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தார். பின்பு, தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அந்த சிறுவன், தனது தாயிடம் சென்று சேர்ந்துவிட்டார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெறப் பாரம்பரிய சீன புத்தாண்டையொட்டி, அந்த சிறுவனுக்கு அவருடைய உறவினர்கள் ஹாங்பாவ் எனும் பரிசுத் தொகையை வழங்கினர்.
சீன புத்தாண்டில், அந்நாட்டு கலாச்சாரப்படி ஒரு சிவப்பு நிற பையில் பணம் வைத்து சிறுவர்களுக்குப் பெரியவர்கள் பரிசாகத் தருவார்கள். இது அந்நாட்டுக் கலாச்சார வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இருந்த தொகை மற்றும் தற்போதைய பரிசுத் தொகை என மொத்தமாக அவரது கணக்கில் சுமார் 80 ஆயிரம் யுவான் அளவிலான பரிசுத் தொகை இருந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 11 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பரிசுத் தொகையானது சிறுவனின் கணக்கிலிருந்து தந்தையின் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த தொகையானது தந்தையின் இரண்டாவது திருணத்திற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தைச் சிறுவன் தந்தையிடம் திரும்பக் கேட்ட போது அவர் திருப்பி தர மறுத்துவிட்டார். இந்நிலையில், அந்த பணத்தைத் தனது தந்தையிடம் இருந்து அந்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு சிறுவன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், 80 ஆயிரம் யுவான் தொகையைச் சிறுவனுக்குத் திருப்பி தருமாறு தந்தைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்ற தீர்ப்பில், ஹாங்பாவ் எனும் கலாச்சார முறைப்படி சிறுவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுகளை அவரது பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் சிறுவர்களின் கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்த பரிசுப் பொருட்களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமையுள்ளது. அவ்வாறு அவர்களுக்கு உரியக் கடமைகளைச் செய்யத் தவறிய பெற்றோர்களுக்கு அந்த தொகையைப் பயன்படுத்த உரிமையில்லை. குறிப்பாக, திருமணம் போன்ற தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு இந்த பணத்தைச் செலவழிக்க உரிமை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/order-2026-02-28-21-40-59.jpg)