இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அண்மையில் தமிழகத்தை உலுக்கிய தரமணி மற்றும் நந்தனம் கல்லூரியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு, ''நேஷனல் கிரைம் பியூரோ (NCB) ஏற்கனவே எந்த மாதிரியான குற்றங்கள், எந்தெந்த சதவீதம்  நடந்தது என்று கொடுத்த பட்டியலை சமூக நலத்துறையின் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் சட்டமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார்கள். இந்தியா முழுக்க இருக்கும் 36 மாநிலங்களில் மிக குறைந்த அளவிலான  குற்றச் செயல்கள் என்பது தமிழ்நாட்டில் இருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. இப்போது கூட நாங்கள் யாராகா இருந்தாலும் பொதுவெளியில் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.

Advertisment

எந்த குற்றச்செயலாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். மிகக் குறைந்த அளவிலான அந்த குற்றச்சாட்டுகள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தலுக்காக இவர்கள் சொல்லுகிற எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடாது'' என்றார்.

'தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, வெளி மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்று தவெகவின் விஜய் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''கருத்துச் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் இந்த ஒன்றிய அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களையும் பார்க்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளில் தினந்தோறும் நடக்கிற விஷயங்கள் மற்ற மாநிலங்களுக்கும் நம்ம மாநிலத்துக்குமா பார்க்கணும். இதையும் தாண்டி நான் ஏற்கனவே சொன்ன என்சிபி அந்த பட்டியலையும் எடுத்து வச்சு பார்க்க வேண்டும். எடப்பாடி போன்றவர்கள் சொல்கிறார்கள் என்றால் ஒரு நாலு வருஷம் அவர் இருந்தார்.  ஒவ்வொரு நாளுமே ஒரு புத்தகம் போடுற அளவுக்கான குற்றப் பதிவுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. இப்போது நடக்கிற குற்றப்பதிவுகளுக்கும் அதிமுக ஆட்சியில் நடந்த குற்றப்பதிவுகளுக்கும் நீங்கள் கணக்கெடுத்தீர்கள் என்றால் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட இருக்காது. வேண்டும் என்றால் ஆதாரங்களோடு நாங்கள் வாதிடத் தயாராக இருக்கிறோம்' என்றார்.

Advertisment