தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அரசியல் தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

நடிகர் விஜய் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தைத் தமிழகத்தில் மேற்கொள்ள இருப்பதாக முன்னதாகவே பல தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தமிழக முழுவதும் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பரந்தூரில் விவசாயிகள் போராட்டத்தில் முதல் சந்திப்பு இருந்ததைப் போன்று தன்னுடைய முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் கட்டமாக 100 இடங்களில் முதல் சுற்றுப்பயணம் இருக்கும் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.