Advertisment

பிரச்சாரப் பயணத்தை தொடங்கும் வைகோ; மதிமுக அறிவிப்பு!

vaiko-mdmk-hand

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொள் உள்ளார். இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் முழுவதும்  8 இடங்களில் தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிப் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

அதன்படி ஆகஸ்டு 9ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் குறித்து வைகோ பேச உள்ளார்.  ஆகஸ்டு 10 ஆம் தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி கம்பத்தில் முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், ஆகச்ட் 12ஆம் தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்.

மேலும் 13ஆம் தேதி கும்பகோணத்தில்  மேகதாதுவும், மீத்தேனும், 14ஆம் தேதி, நெய்வேலியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற தலைப்பிலும்,  18 ஆம் தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பிலும், 19ஆம் தேதி  திருவான்மியூரில் சமூக நீதியும்; திராவிட இயக்கமும் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார். அதோடு அனைத்துக் கூட்டங்களிலும் கட்சியின் பொருளாளர் செந்திலதிபனும், கவிஞர் மணிவேந்தனும் உரையாற்றுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

campaign vaiko mdmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe