Advertisment

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

ramadoss-suspended

பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ம. அன்பழகன் இன்று (20.07.2025) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி. சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணியால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிப்பட்டது. 

இதில், அந்த குழு அந்த 3 சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா. அருளை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழு முன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.விசாரனைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

suspended MLA's pmk anbumani ramadoss Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe