“உடன் பிறந்தவனாக நம்மோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது” - ஆடு, மாடுகள் முன் சீமான் உருக்கமான பேச்சு!

mdu-seeman-speech

மதுரை மாவட்டம் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையான விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (10.07.2025) மாநாடு நடைபெற்றது. இதற்காக சுமார் 2000 கிடை மாடுகள், ஆடுகள், எருமை மாடுகள், செம்மறி ஆடுகளும்  மாநாட்டுத் திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டன. வனத்துறையினருக்குச் சொந்தமான நிலத்தில் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது என்கிற தடையை நீக்க வேண்டும். ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமையை முறையாக வழங்க வேண்டும் என இந்த மாநாடு நடைபெற்றது.

அதாவது இந்த மாநாட்டு மேடைக்கு முன்புறமாக 2000 கிடை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பின்பாக நாம் தமிழர் கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஆடு மற்றும் மாடுகள் முன் சீமான் பேசுகையில், “இரண்டாவது தாய்க்குடி ஆடு மாடுகளை மேய்த்த மேய்ப்பர் குடி ஆயர்குடி கோன். அந்த குடிதான் மானுட குலத்தின் 2வது பெரிய தாய்க்குடி. அங்கிருந்து கீழே இறங்கினோம். கீழே இறங்கி வந்து நிலமும் நிலம் சார்ந்த வயலும் வயல் சார்ந்த இடமும் அங்கே வந்தோம். அங்கே மருத மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த நிலத்திற்குப் பெயர் மருத நிலம் என்று வந்தது. 

அங்கே தான், ‘ஏன் நமக்கான உணவுப் பொருளை நாமளே விளைவித்து உண்ணக்கூடாது?’ என்று முடிவெடுத்தோம். அங்கே ஆறைக் கண்டோம். நதியைக் கண்டோம். அங்கே நிலைத்து வாழலாம் என்ற முடிவெடுத்தோம். நகர்ந்து நகர்ந்து வந்த நாம் அந்த இடத்திலே தான் வேளாண்மை செய்ய தொடங்கினோம். வேளாண்மைக்காக நாம் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்துவதுக்கு வயக்கினோம். திமிறி நிமிர்ந்திருக்கிற திமிரோடு ஆற தழுவித் தழுவி தழுவி காட்டு விலங்கான அவனை வீட்டு விலங்காக வயக்கினோம். மாற்றினோம். அவன் திமிரோடு ஆற தழுவி அன்பு கொண்டு தழுவித் தழுவி அவனை நம்மோடு தன்வயப்படுத்தினோம். அதுதான் ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படுகிறது. 

இன்று வரை இந்த ஜல்லிக்கட்டு என்பது பின்னாடி வந்த நாயக்க மன்னர்கள் இந்த காளையின் கொம்பிலே சல்லிக் காசுகளைக் கட்டி விட்டதால் அது சல்லியை கட்டினதனால் சல்லிக் கட்டு என்று ஆகிவிட்டது. ஏறு தழுவுதல் தான் நம்முடைய விளையாட்டு. சங்க இலக்கியத்தில் இன்று வரை பாக்கள் இருக்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூக தம்பி தங்கைகள் அன்றிலிருந்து நம்மோடு ஒரு உறவினாக உடன் பிறந்தவனாக நம்மோடு இணைந்து இந்த ஆடுகளும் மாடுகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ‘கொல்லேற்று கோடஞ்சுவானை மறுமையும் புல்லாலே ஆய மகள்’ என்று பா இருக்கிறது காளையை அடக்குவதற்கு அஞ்சுவானை யானால் அஞ்சுகிற ஆண்மகனை அடுத்த பிறப்பிலும் மனம் செய்ய ஆயமகள் அஞ்சுவாள். அவன் கோழை என்று கருதப்படுகிறான். 

‘கொல்லேற்ற கோடஞ்சுவானை மறுமையும் புல்லாலே ஆய மகள்’ என்று சங்க இலக்கியத்திலே பா இருக்கிறது. பாட்டு இருக்கிறது. அப்ப இருந்து நாம் இந்த ஏறுதழுவி வருகிறோம். அந்த காளையை பழக்கி, வயக்கி உழவுக்கு பயன்படுத்தினோம். அன்றிலிருந்து நம் குடும்ப உறுப்பினராக உடன்பிறந்த ஒருவனாக நம்மோடு இருப்பது இந்த மாடுகள். அப்படி என்றால் 3வது நிலம் தான் மண். கல் தோன்றிவிட்டது. மண் தோன்றவில்லை. 3வது நிலமான மருத நிலம்  தோன்றுவதற்கு முன்பே கல் தோன்றிய குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தை வாலோடு முன்தோன்றிய மூத்தகுடி” எனத் தொடர்ந்து பேசினார். 

cows goats madurai Naam Tamilar Katchi ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe