Advertisment

“முருகன் மாநாடு நடத்தி எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்” - சத்யராஜ்

Thi

2025 ஆம் ஆண்டிற்கான விசிக விருந்து வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது “கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது எல்லாம் பிரச்சனையே இல்லை. நமது பிரச்சனையே சாதி ஒழிப்பே தமிழ்தேசியம். சாதியை வைத்துக் கொண்டு எப்படி தமிழ்தேசியம் சாத்தியமாகும்?ஆணவ கொலை எப்படி நடக்கிறது?  ஜப்பான்காரனா.. சீனாகாரனா வந்து வெட்டுகிறான். ஒரு தமிழன் தான் இன்னொறு தமிழனை வெட்டுகிறான். அப்படி இருக்கையில் சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும். அதனால் தான் சாதி ஒழிப்பே தமிழ்தேசியம் என்பது முக்கியமான கொள்கை.

Advertisment

பெரியாரை பொறுத்தவரை கடவுள் இருக்கிறதா.. இல்லையா என்பது அவரது பிரச்சனை இல்லை. சாதி ஒழிய வேண்டும் என்பதுதான் அவருக்கு முக்கியம். அதற்கு தடையாக இருக்கும் கடவுள் என்ற கற்பணை கருத்தியலை மறிக்கிறார். கடவுள் என்ற மாய கற்பனையை வைத்து கொண்டு எல்லா வித்தையும் காட்டப்படுகிறது. ஆனால், அந்த வித்தை எல்லாம் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நாங்க எல்லாம் கோவிலுக்கு போவோம், பிரசாதம் வாங்கிகொள்வோம் வெளியே வந்த பிறகு சாதி மறுப்பே தமிழ் தேசியம் என்று பேசுவோம். அதனால், தயவுசெய்து நீங்கள் எங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் எங்களிடம் ஏமாந்துவிடாதீர்கள். முருகன் மாநாடு நடத்தி ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம்.

Advertisment

தமிழ்நாடு இந்தளவிற்கு முன்னிலையில் இருக்கிறது என்றால், அதற்கு பெரியாரின் சிந்தனைகளும், அம்பேத்கரின் சிந்தனைகளும்தான் காரணம். பெரியார் ரஷ்யா சென்றுவிட்டு வந்து சொன்னார். பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் என்னுடை தேர்வு கம்யூனிசம் தான். ஆனால் முதலில் ஏழை பணக்காரன் வேறுபாடு ஒழியவேண்டுமா... இல்லை சாதி ஒழிய வேண்டுமா என்று கேட்டால், நான் முதலில் சாதிதான் ஒழிய வேண்டும் என்று சொல்லுவேன். ஏனென்றால், சரியான வாய்ப்பு கிடைத்தால், ஒரு ஏழை பணக்காரனாகிவிடுவான். ஆனால், என்னாதான் வாய்ப்பு கிடைத்து பணக்காரனானலும், தாழ்ந்த சாதிக்காரன்னு முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று சொன்னார். ஜனாதிபதியாக இருந்தாலும் கூட கோவிலுக்கு வெளியேதான் நிற்க வைப்பார்கள்

Award Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe