Advertisment

தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை!

thalilapuram-anbumani-car

பா.ம.க.வில்  அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கும்பகோணத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (10.07.2025) நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''ஐந்து வயசு குழந்தை மாதிரி நான் இருக்கேனாம். அப்படியென்றால் அந்த குழந்தை தான் மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவர் ஆக்கியது.  இப்பொழுது சொல்கிறேன் என் பெயரை யாரும் போடக்கூடாது. இன்சியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய பெயரை போடக்கூடாது. ஏனென்றால் என் பேச்சைக் கேட்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. உங்களை செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். மக்களை சென்று பாருங்கள். மக்களுடன் மக்களாக வாழுங்கள். மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். ஊர் ஊராக போங்கள்'' என்றார்.

Advertisment

இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் அன்புமணி ராமதாஸ் அவருடைய தாயார் சரஸ்வதி சந்திப்பதற்காக வருகை தந்துள்ளார். அன்புமணி அன்புமணி ராமதாஸ் தற்போது தைலாபுரத்தில் அவர் தாயாரைச் சந்தித்துப் பேசுவது பா.ம.க. அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக பாமக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் 2வது முறையாக தைலாபுரத்திற்கு வருகை தந்துள்ளது கவனிக்கத்தக்கது.

pmk Ramadoss anbumani ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe