Advertisment

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது; இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்!

fishermenoriginal

9 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். வடமேற்கு கோயிலம் கடற்கரை பகுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும், மீன்வர்களின் இரண்டு நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். 

Fishermen Sri Lanka Tamil fishermen
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe