கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் திவாகர் (வயது 13). இந்த சிறுவன் பெரிய வடவாடியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதால் சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி அவரது தந்தை திவாகரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (25ஆம் தேதி இரவு) மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றிய திவாகர்; வீட்டிற்குச் சென்றால் எங்கே பெற்றோர்கள் திட்டுவார்கள் எனப் பயந்து இன்று (26.02.2026) அதிகாலை 03.30 மணிக்கு பூவனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே அப்பகுதி வழியாகச் சென்ற ஏதோ ஒரு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்று ரயில் பாய்ந்ததில், பலத்த ரத்தக் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை சப் - இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீஸார் திவாகர் பிரேதத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/cdm-train-stu-2026-02-26-15-30-44.jpg)