புத்த துறவிகளை குறிவைத்து பெண் ஒருவர் பாலியல் வலையில் சிக்க வைத்து சுமார் 100 கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் தாய்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த ஆன்மாவையே கதி கலங்க வைத்துள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் செயல்பட்டு வரும் பிரபல புத்த துறவிகள் மடத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துறவி ஒருவர் துறவற வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். இதுபோலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் மிரட்டல்கள் காரணமாக புத்தபிச்சு வெளியேறினாரா அல்லது ஏதேனும் நெருக்கடிகள் காரணமாக வெளியேறினாரா என விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறுதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விலாவன் எம்சாவத் என்ற முப்பது வயது பெண் ஒருவர் புத்த துறவியுடன் பாலியல் உறவு வைத்து இதனால் தான் கர்ப்பமானதாக புத்த துறவியை மிரட்டி 72 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
Advertisment
தொடர்ந்து அந்த பெண்ணின் அழுத்தத்தால் அத்துறவி அந்த மடத்தில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நோந்தபுரி பகுதியில் விலாவன் எம்சாவத் வசித்து வரும் வீட்டில் பாங்காக் போலீசார் விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். சோதனையில் அவருடைய வீட்டில் புத்த துறவிகளுடன் இருக்கும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
Advertisment
விலாவன் எம்சாவத் 'அப்பாட்' என்று அழைக்கப்படும் புத்த துறவிகளை தனது பாலியல் வலையில் வீழ்த்தி தனிமையில் இருந்ததை போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை வைத்து துறவிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்ததும் தெரிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட புத்த துறவிகளை தன்னுடைய பாலியல் வலையில் வீழ்த்திய 385 மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாயை) சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது.