Advertisment

சென்னையில் கோர விபத்து; 8 பேர் பலியான சோகம்!

thermal

8 north indian labour lost their lives at ennore Thermal Power Station

சென்னை எண்ணூர் அணல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல் மின் திட்ட கட்டுப்பானப் பணிகள் ஊரணம்பேட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதில், தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி உள்ள இரண்டு அலகுகள் மூலம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலைய பணிகள் கிட்டத்தட்ட 70% முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், இன்று மின் நிலையத்தில் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு கட்டமாக, கிட்டத்தட்ட 30 அடி உயரத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென முகப்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பெரும் விபத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ளா ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தற்போது வரை 8 தொழிலாளர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உயிரிழப்புகள் அதிகரிக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே,  அந்த இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்ற கோணத்தில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

labours north indian thermal power plant ennore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe