பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளுக்கான கால நீட்டிப்பை வழங்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில், “நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

அதே சமயம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6.36 கோடி கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இறந்தவர்கள், வேறு இடத்திற்கு மாறியோர், இரட்டை பதிவு என சுமார் 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாடு முழுவதும் 77 லட்சத்து 52ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

அதிலும் குறிப்பாக உயிரிழந்தவர்கள் லட்சம் பேர் நீக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களைத் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் 8 லட்சம் பேரும், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 39 லட்சத்து 27 ஆயிரம் பேரும்,  ஏற்கனவே பதிவு செய்தோர் என 3. 2 லட்சம் பேரும், பிற காரணங்களுக்காக 24 ஆயிரம் பேர் என மொத்தம் 77.52  லட்சம் பேர் படிவங்கள் பெற முடியாதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் பெயர்களை நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையைப் பொறுத்தவரைக்கும் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளவர்களில், 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.