சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர், 70 வயதான மூதாட்டி மகேஸ்வரி. இவர் , 9 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், தனது வீட்டின் முன்பாக வீட்டை  திறந்து, வாசல் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். முன்னதாக, சைக்கிளில் வந்து வீட்டின் வாசல் அருகில் முகமூடியணிந்தபடி பதுங்கியிருந்த வழிப்பறி கொள்ளையன், மூதாட்டியின் கண்களை மூடிக்கொண்டு அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறிக்க  முயன்றுள்ளார். 

Advertisment

உடனடியாக சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, கூச்சலிட்டதுடன் கொள்ளையனின் முகத்தில் தண்ணீரை ஊற்றி தாக்கி விரட்டியடித்துள்ளார். இதனால் பதறிப்போன முகமூடி கொள்ளையன் தலை தெறிக்க அங்கிருந்து தப்பியோடியுள்ளான். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக மூதாட்டி மகேஸ்வரி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அதிகாலை நேரம் துணிச்சலுடன் தனியாளாக முகமூடி கொள்ளையனை விரட்டியடித்த மூதாட்டியை, காவல்துறையினர் பாராட்டினர்.

சிவகாசி அருகே திருப்பதி நகரில் பள்ளி தாளாளர் வீட்டில் ஜன்னலை அறுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட  அரங்கேறியிருக்கிறது. அடுத்தடுத்து  அரங்கேறி உள்ள இரு வேறு சம்பவங்களால் சிவகாசி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisment