சிதம்பரம் டிஎஸ்பி சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறையில் செவ்வாய் கிழமை இரவு 7 மணி முதல் பரபரப்பாக பேசப்பட்டது. 

Advertisment

இது குறித்து காவல் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தோம். அதில் சம்பவம் உண்மை என்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர் உதவியாளர் உள்ளிட்ட 7 பேர் பல்வேறு குற்ற சம்பவங்களை காவல்துறை  தலைமைக்கு மறைத்துள்ளார்கள் என்றும் லாட்டரி சீட்டு விற்பனையாளரை தனி பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர் அளித்த தகவலின் பெயரில் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டு தொழில் நடத்தப்பட்டு வருகிறது என விசாரணையில் கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு முதல் கட்டமாக இந்த 7 பேரையும் பணி மாற்றம் செய்து பின்னர் துரை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்கள்.

Advertisment

இதனால் கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பலத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்ருட்டி டிஎஸ்பியாக பணியாற்றி வரும் ராஜா கூடுதல் பொறுப்பாக சிதம்பரம் டிஎஸ்பியாக செயல்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.