தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் உள்ள கிருஷ்ணமேனு சாலையில் அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் இல்லத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (14.12.2025) சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிலவரம், தொகுதிப் பங்கீடு மற்றும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பான பல்வேறு முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக  தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

அதோடு அமித்ஷாவின் தமிழகம் வருகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், 'ஜனவரியில் நடக்க இருக்கும் என் பரப்புரை பிச்சாரத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தேன். தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசவில்லை' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய சந்திப்பில் பாஜக போட்டியிட ஆர்வம் காட்டும் 65 தொகுதிகள் கொண்ட விருப்ப பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் அடிப்பையில் இந்த 65 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.  அந்த பட்டியலில் மயிலாப்பூர், திநகர், வேளச்சேரி, கன்னியாகுமரி, விருகம்பாக்கம், குலைச்சல், கோவை, கிள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisment