58 lakh people removed the draft voter list released in west bengal
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது.
அதன்படி மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் வாக்காளர்களாக உள்ளவர்களிடம் இருந்து பெற்ற எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வந்தது.
மேற்கு வங்கத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், அம்மாநில வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்களுடைய பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்படி பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் படிவங்களை நிரப்பி விண்ணபிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இறந்தவர்கள், முகவரியில் தற்போது வசிக்காதவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோர்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்ட பின்னர் வெளியான இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதில் இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் என ஏறத்தாழ 58 லட்சம் பேருடைய பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us