புதுப்பிக்கப்பட்டது
16 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற உள்ள இந்த குடமுழுக்கு வைபவத்தில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தருவார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வில் பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து வழித்தடங்கள், கார் பார்க்கிங் இடங்கள் ஒவ்வொன்றும் திருச்செந்தூர் சப் டிவிஷன் காவல்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் தென் மண்டல டி.ஐ.ஜி.சந்தோஷ் ஹதி மானி உள்ளிட்ட 2 டி.ஐ.ஜி.க்கள் , தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உட்பட 9 மாவட்ட எஸ் .பி.க்கள் , 10 ஏ.டி.எஸ் .பிக்கள் ., 100க்கும் மேற்பட்ட டி.எஸ் .பி.க்கள் , இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 500 போலீசார் வருகை தந்து குடமுழுக்கு பந்தோபஸ்து பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கோயில் உள் பிரகாரம், வெளி பிரகாரம், கோயில் வளாகம், கடற்கரை பகுதி மற்றும் திருச்செந்தூர் நகரம் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி