திராவிடக் கட்சிகள் மற்றும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமிழின உரிமை, சமூக நீதி, ஊழல் ஒழிப்பு போன்றவற்றிற்காக போராடி வருகிறது தமிழர் விடியல் கட்சி. இக்கட்சியானது மா.டைசன் மற்றும் உ.இளமாறன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவர்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்பு, பெரியார் பற்றிய அவதூறு கருத்திற்கு எதிர்ப்பு எனப் பல்வேறு போராட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த கட்சியில் சென்னையில் நடைபெற்ற தமிழீழ மாணவர் போராட்டம் உள்பட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த மாணவரும், தற்போது தீவிரமாக அரசியலில் இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளருமான இளையராஜா தன்னுடைய ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் தமிழர் விடியல் கட்சியில் இணைந்தார்.

Advertisment

ila2

இந்த நிகழ்வானது செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் சரஸ்வதி மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழர் விடியல் கட்சியில் இணைந்த இளையராஜாவிற்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உ.இளமாறன் பொறுப்பு வழங்கி கெளரவித்தார்.