Advertisment

இந்து அறநிலையத்துறை மறுபதிப்பு செய்து வெளியிட்ட 500 புத்தகங்கள்!

hin

500 books reprinted and published by the Hindu Charities Department

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பதவி வகித்து வருகிறார். இவர் பதவிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து மதம் சம்பந்தமான 1,018 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 500 புத்தகங்களை மறுபதிப்பு செய்யப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியிடப்பட்டது. 

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும் திருக்கோயில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டி எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்திடவும், அந்நூல்களை திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் கடந்த ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisment

hin1

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இப்பதிப்பகப் பிரிவின் மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட  1018 அரிய புத்தகங்கள் உள்ளது அதில் தற்போது 500 புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

mk stalin sekarbabu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe