50 people arrested for trying to struggle at Chief Minister's visit in pudukkottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (10-11-25) நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
முதலமைச்சர் வருகையையொட்டி அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக காவேரி - வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தக் கோரி காவேரி - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கீரனூர் காந்தி சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய ரயில் நிலையத்தில் இருந்து காந்தி சிலை அருகே பேரணியாக வந்த போது 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். முதலமைச்சர் விழா முடிந்து சென்றதும் விடுவிக்கப்பட்டனர்.
Follow Us