கோப்புப்படம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளபட உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் இன்று முதல் ( 20.02.2026) முதல் வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தது. முன்னதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இன்று முதல் முதல், ஏப்ரல் மாதம் 05ஆம் தேதி (05.04.2026) வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண் ஈ. 18- இல் 16 பேருந்துகளும் , கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண் 18 ஏ- இல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us