ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் மாணிக்கம் - மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் உள்ளார். இத்தகைய சூழலில் தான் சாய் சரணின் பெற்றோர் நேற்று (02.12.2025) இரவு வாழைப்பழம் சாப்பிடக் கொடுத்துள்ளனர். அதன்படி வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சிறுவன் சாய் சரணுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து சாய் சரணின் பெற்றோர், சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளார். மேலும் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மூச்சு குழாயில் வாழைப்பழம் மூச்சு தினறல் ஏற்பட்டு சிறுவன் உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுவன் சாய் சரணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு அருகே வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us