Advertisment

“பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய்....” - போஸ்டர் மூலம் அ.தி.மு.க. கோரிக்கை!

pongal-poster-admk-5000

எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பொங்கல் பரிசு பணம் குறித்து இன்னமும் அமைதியாக இருக்கிறது.

Advertisment

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும்,  தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது சுற்றுப் பயணத்தில் வலியுறுத்தி வருகிறார். நடப்பு ஆட்சியின் கடைசிக் கால கட்டத்திலாவது மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் 5,000 ரூபாய் தைப் பொங்கலுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியில் இந்த எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சென்னை ராயப்பேட்டை பகுதிகளில் இன்று (31.12.2025) அதிமுகவினர் பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மக்களும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

admk Chennai edappadi k palaniswami pongal gift Poster rayapettai pongal 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe