கடந்த நவம்பர் 06 மாலையன்று, மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி நாட்டின் கிராமப்புற பகுதியிலிருக்கும் கோப்ரி நகரத்தில் கிராமப்புற மின்மயமாக்கல் திட்டப்பணிகளை மேற் கொண்டிருக்கிற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் தங்கும் விடுதியில் திடீரென ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் புகுந்திருக்கிறார்கள். இதனால் பதறிச் சிதறி ஒடிக் கொண்டிருந்தவர்களில் ஐந்து தொழிலாளர்களை பங்கரவாதிகள் ஆயுத முனையில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். இது குறித்த தகவல்கள் வெளியானதும், இந்த பயங்கர கடத்தல் எதற்காக நடத்தப்பட்டது என்ற பீதியில் மாலியே பதற்றப்பட்டிருக்கிறது
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதப் படைகளுக்கும், அரசுப்படைக்குமிடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடந்து வருகிற நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அண்மை நாட்களாக அதிகரித்து வருகிறதாம். இந்த நிலையில் தான், மாலியின் மேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளால் ஐந்து இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டிருப்பது காலதாமதமாகவே வெளிவந்திருக்கிறது. இதற்கிடையே அந்நிறுவனம் இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது. பாதுகாப்பு காரணம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பணிநிமித்தம் அங்கு குடியமர்ந்திருக்கிறார்கள். இந்தியர்கள்கள் இப்படி படு பயங்கரமாக ஆயுதவாதிகளால் கடத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று மாலி நாடு கூட அறிவிக்கவில்லை. கடத்தலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையாம்.
இந்நிலையில் தான், கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா, அருகேயுள்ள கண்மணியாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவர் என்பது வெளிவந்ததால் கதிகலங்கிப் போயிருக்கிறது கடையநல்லூர். இவர்கள் கடந்த 8 மாதம் முன்பு தான் உறவினர்கள் மூலம் மாலி சென்றுள்ளனர். இசக்கிராஜாவிற்கு பீரவீணா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். புளியரையைச் சேர்ந்த இவரின், உறவினரின் மூலம் தகவல்றிந்து கதறிய பிரவீணாவும், சுரேஷ்வின் தந்தையும், கடத்தப்பட்ட இருவரையும் உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும், கண்ணீரோடு கோரிக்கை அனுப்பியுள்ளனர்.
மாலியின் தலைநகரான பமாகோவில் உள்ளிட்ட மாலி நாடே பயங்கரவாதிகளின் பிடியிலிருக்கிறதாம். மாலியில் ராணுவ ஆட்சி நடந்துவருகிற நிலையில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். பயங்கர்வாதிகளுடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய அமைப்பினர் மாலியில் தொடர் தாக்குதலை நடந்தி வருவதுடன் ராணுவ ஆட்சியாளருடனும் மோதி வருகின்றனராம். மேலும் ஆயுதத்திற்காக பயங்கரவாதிகள் மாலியில் உள்ள வெளிநாட்டினரைக் கடத்தி பணம் பறிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தியத் தொழிலாளர்கள் குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஐ.எஸ்.எஸ். ஆகியவை கடத்தியது அச்சத்தையும், பீதியையும் கிளப்பியதுடன் அதிர்ச்சியில் கடையநல்லூரே உறைந்து போயிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/mali-2025-11-10-16-23-51.jpg)