கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆன்லைன் முறையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் லாட்டரி, வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்களைக் கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ன் ஒரு பகுதியாக, உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் சிவானந்தம் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 39), சதிஷ் (வயது 31), ஜோதி (வயது 48), பிரகாஷ் (வயது 33), கணேசன் (வயது 45,) ஆகியோர் மொத்தம் ரூ.1,07,613 பணத்துடன் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்குப் பயன்படுத்திய பில் புக் மற்றும் நோட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சிதம்பரம் நகரத்தில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுக்காமல் இருந்ததால் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us