கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதில் ஒடிசா மாநில கஞ்சா வியாபாரி ஒருவர் கஞ்சாவை கடத்தி வந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய போவதாக தகவl கிடைத்தது. இதன்பேரில், மேற்படி ஒடிசா மாநில கஞ்சா கடத்தல் நபர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பிடித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பேரில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார், காவல் ஆய்வாளர் கதிரவன், உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம், ஆனந்தகுமார், பிரசன்னா மற்றும் போலீசார் கடலூர் கஸ்டம்ஸ் ரோடு வெளிச்சமண்டலம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த நபர்களை கண்காணித்து, அவர்களை வளைத்து பிடித்து சோதணை மேற்கொண்டனர்.
இதில் 22 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றியும், மேலும் விசாரணை மேற்கொண்டதில் 1. தங்கபாண்டி (எ) எழுமலை வயது 30. த/பெ இளங்கோ, எஸ்.என்.சாவடி, 2. சிவா வயது 22, த/பெ வின்சென்ட், சரவணா நகர், திருப்பாதிரிப்புலியூர், 3. தீனா வயது 24, த/பெ சுரேஷ். பச்சையாங்குப்பம். 4. துளசிதாஸ் வயது 24, த/பெ வெங்கடேசன், பச்சையாங்குப்பம், 5. சதீஷ் வயது 28. த/பெ முருகன், எஸ்.என்.சாவடி, 6. தேவா வயது 25. த/பெ ரவி, கே.என்.பேட்டை. 7. ஆகாஷ் வயது 20, த/பெ மச்சேந்திரன், தொட்டி பெரிய காலனி, கடலூர் 8. நாராயணன் வயது 26. த/பெ கிருஷ்ணமூர்த்தி, கூத்தப்பாக்கம், 9. ரவி வயது 21, த/பெ சண்முகம், வன்னியர்பாளையம், 10. கிருஷ்ணசாமி வயது 22, த/பெ ரகுகுமார். அங்குசெட்டிபாளையம், பண்ருட்டி, 11. கோகுலகிருஷ்ணன் வயது 22. த/பெ கோவிந்தன், திருவாமூர், பண்ருட்டி, 12. அப்பு வயது 25. த/பெ ஜெயராஜ். வீரபாண்டியன் தெரு, விருத்தாசலம் மற்றும் தப்பி ஓடிய எதிரி பிரதாப் சுவைன் த/பெ லிங்கராஜ் சுவைன். கொலமண்டலா பாத்ரா போஸ்ட், கஞ்ஜம் மாவட்டம், ஒடிசா மாநிலம் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா. காவல் ஆய்வாளர்கள் நந்தகுமார். சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முருகன், மற்றும் போலீசார் சிலம்பிநாதன்பேட்டை அருகே உள்ள முந்திரி தோப்பில் சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த நபர்களை கண்காணித்து, அவர்களை வளைத்து பிடித்து சோதணை மேற்கொண்டனர். இதில் 20 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றியும், மேலும் விசாரணை மேற்கொண்டதில் 1. பிரதாப் சுவைன் வயது 34, த/பெ லிங்கராஜ் சுவைன், கொலமண்டலா பாத்ரா போஸ்ட் கஞ்ஜம் மாவட்டம், ஒடிசா மாநிலம். 2. வைத்தீஸ்வரன் வயது 20. த/பெ சீனிவாசன், ஜே.எம் மருத்துவமனை பின்புறம். திட்டக்குடி. 3. ராஜ்குமார் வயது 35, த/பெ கதிர்வேல், புலிகரம்பலூர், 4. அருண்குமார் வயது 23, த/பெ திருஞானம், அடரி, வேப்பூர். 5. பாலச்சந்தர் வயது 34. த/பெ ராஜசேகர், ரெட்டைக்குறிச்சி, வேப்பூர் 6. ஸ்ரீநாத் வயது 30. த/பெ மணி, கீழ்கவரப்பட்டு, பண்ருட்டி, 7. ஷேக் (எ) ஜெயகணேஷ் வயது 27. த/பெ ஜெயபால், பி.என்.பாளையம், மேல்பட்டம்பாக்கம், பண்ருட்டி 8. ஜெயசூரியா வயது 20, த/பெ வெங்கடேஷ், நத்தப்பட்டு, கடலூர் 9. ஜானா வயது 22, த/பெ செல்வம், பி.என்.பாளையம், பண்ருட்டி 10. முகமது அசிம் பாஷா வயது 20. த/பெ முகமது மூசா, லப்பை குடிகாடு, பெரம்பலூர்.
11. சையத் முஸ்தபா வயது 19, த/பெ ஷாகுல் அமீது, வாலிகண்டபுரம், பெரம்பலூர் 12. மாம்பலம் (எ) அசோக்ராமன் வயது 29, த/பெ ஜெயராமன், சொரத்தான்குழி, பண்ருட்டி 13. நித்தி (எ) மனோஜ்குமார் வயது 23, த/பெ மாரிமுத்து. சேட்டுத்தங்குப்பம், விருத்தாசலம் 14. ராம்குமார் வயது 22. த/பெ முத்துக்குமார். மேலக்குப்பம், விருத்தாசலம் 15. அங்கயம் (எ) ரத்தினவேல் வயது 21, த/பெ குமார். சேட்டுத்தங்குப்பம், விருத்தாசலம் ஆகியோர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 42 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் அதிகாரிகளை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.