தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2025 இன்று (04-08-25) இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கான பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக, முதல்வர் முன்னிலையில் சுமார் ரூ.32,554 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, ரூ.2,530 கோடி முதலீட்டில் ஐந்து தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் தொழில் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் இந்த மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.