தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது.  இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது அப்போது இடி மின்னல் அதிகமாக இருந்தது. அப்போது கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள். கணிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு மற்றும் அரியநாச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி ஆகிய 4 பேர்  மக்காச்சோளத்திற்கு உரம் வைக்கும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.  

Advertisment

அப்போது  மின்னல் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் இரு பெண்களுக்கு மின்னல் தாக்கி கண் பார்வை பழுதாகி உள்ளது இவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வேப்பூர் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment