தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில் இன்று (22-07-25) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிகாலையிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ளனர். அதோடு, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.