தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் முசமில் ஷகீல் கனாய், அனந்த் நாக்கை சேர்ந்த மருத்துவர் ஆதில் அகமத் ராத்தேர், லக்னோவைச் சேர்ந்த ஷகீன் சையத் மற்றும் முப்தி இஸ்பான் அகமத் ஆகிய 4 பேரை கைது செய்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

முன்னதாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், முகமது உமர் நபி ஆகிய 3 மருத்துவர்களை என்.ஐ.ஏ கைது செய்து சரியான ஆதாரம் இல்லாததால் விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.