4 massacre at Terrible fire in apartment building in hong kong
ஹாங்காங்கின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காக்கில் உள்ள பல அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் தீப்பற்றி எரிந்த நிலையில், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைத்து தளங்களிலும் தீ பற்றி எரிவதால் தீயை அணைப்பதில் கடுமையாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது..
Follow Us