4 bikes in one week! The same Savi Kannan who stole them! The police are looking for him! Photograph: (police)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் நிறுத்திவிட்டு சாமி கும்பிடச் சென்ற சிட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் பைக் சிறிது நேரத்தில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அடுத்த நாள் 10 ந் தேதி மதியம் மாங்காடு பூச்சிகடை கடை வீதியில் திருட்டு பைக்குகள் வாங்கி உடைக்கும் பழைய இரும்புக்கடை எதிரே உள்ள ஓட்டலில் வடகாடு போலீசார் இருவர் மதிய சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது முதல் நாள் கீழாத்தூர் கோயிலில் காணாமல் போன பைக் ஓட்டல் வாசலில் நிற்பதைப் பார்த்தனர். அந்த பைக்கை கைப்பற்றிக் கொண்டு யார் இந்த பைக்கை ஓட்டி வந்தது என்று தேடும்போது பைக்கை நிறுத்திய நபர் மெல்ல நழுவிச் சென்று விட்டார். பைக் கவரில் ஒரு சூப்பர் எக்ஸ் எல் சாவியும் ஒரு ஆதார் ஜெராக்ஸ் நகலும் இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வடகாடு வடக்கு கடைவீதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த வானக்கண்காடு நாராயணன் மகன் சேகர் (55) பைக்கை காணவில்லை. சிசிடிவி கேமராவில் யாரோ ஒரு நபர் சுமார் 7 நிமிடங்கள் வரை பைக் அருகில் நின்று பார்த்துவிட்டு பைக்கை ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. யார் இந்த நபர் என்று தேடிய போது.. இதே நபர் சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ஒரு ஸ்கூட்டி, எக்ஸ் எல் சூப்பர் வண்டிகளை களவாடிச் சென்றுள்ளார் என்று கூறியுள்ளனர்.
அந்த நபர், சில வாரங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் கூனரி தெரு கதிர்வேல் மகன் ஒத்தை சாவி களவாணி கண்ணன் (48) என்பது தெரியவந்ததையடுத்து பைக்கை பறிகொடுத்தவர்களே கண்ணன் வீடுவரை தேடிச் சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பூச்சிகடை ஓட்டல் வாசலில் நின்ற பைக்கில் இருந்தது இந் இந்த களவாணி கண்ணனின் ஆதார் நகல் தான் என்பதும் திருச்சிற்றம்பலத்தில் திருடிய எக்ஸ் எல் சூப்பர் வண்டி சாவியும் தான் இருந்ததும் தெரிய வந்தது. அதனால் அனைத்து பைக் திருட்டுகளையும் மீண்டும் கண்ணன் தான் களவாடிச் செல்வது உறுதியானது.
சிசிடிவி பதிவுகள் இருந்து களவானி சிக்கவில்லை என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் திங்கட்கிழமை ஆலங்குடி டிஎஸ்பி தனிப்படை போலீசார் யார் இந்த ஒத்தை சாவி களவானி கண்ணன் என்று விசாரித்த போது, கடந்த சில வருடங்களில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் நூறுக்கும் மேற்பட்ட பைக்குகளை தன்னிடம் உள்ள ஒற்றை சாவியை வைத்து திருடி விற்ற பல வழக்குகளில் பல முறை சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வந்துள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் ஒற்றைச் சாவி களவானி கண்ணனை பிடித்து விசாரித்த போது, சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, திருச்சிற்றம்பலம் பகுதியில் 4 பைக்குகள் மட்டும் திருடியதாக சொன்னவர் திருடிய பைக்குகளை அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டையில் இருந்து பழைய இரும்பு வாங்க வரும் மதுரை வீரன் வாகனத்தில் விற்று விட்டேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து எருக்கலக்கோட்டை சென்று பைக்குகளை மீட்டு வந்துள்ளனர்.
பைக் திருடனை வடகாடு போலீசார் பிடித்து விசாரித்து வரும் தகவல் அறிந்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அலாவுதீன் வடகாடு காவல் நிலையம் வந்து களவானி கண்ணனிடம் விசாரித்துள்ளார். வடகாடு போலீசார் விசாரணைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செப்டம்பர் 2 ந் தேதி வரை புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். களவானி கண்ணன் ஒரு வாரத்திலேயே 4 பைக் திருடியுள்ளான். இன்னும் வெளியே இருந்தால் எத்தனை பைக்குகளை தூக்குச் செல்வானோ என்கின்றனர் பாதுமக்கள்.
மேலும், இதே போல கீரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து பல பைக்குகள் திருடு போனது. சிசிடிவி கேமராக்களில் பைக்குகளை திருடிச் செல்வது அரசர்குளம் தச்சுத் தொழிலாளி நாகராஜன், வெல்டர் அஜித் என்பது தெளிவாக பதிவாகி இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் கொடுத்தும் அந்த பைக் திருடர்களை போலீசார் பிடிக்கவில்லை. ஆனால் தஞ்சை மாவட்டம், பேராவூரணி போலீசார் கைது செய்து மாங்காடு பூச்சிகடை பழைய இருப்புக்கடையில் இருந்து உடைக்கப்பட்ட பைக்குகளின் பாகங்களையும் கைப்பற்றி சிறைக்கு அனுப்பி வைத்தனர். இது தெரிந்து புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கண்டு கொள்ளவில்லை. சிசிடிவியில் பதிவு இருந்து கீரமங்கலம் போலிசார் நம்மை பிடிக்கவில்லை என்ற துணிச்சலில் ஜாமினில் வெளிவந்துள்ள அஜித் மீண்டும் கீரமங்கலம் பகுதியில் வலம் வருதாக வேதனைப் படுகின்னர் பைக்குகளை பறிகொடுத்தவர்கள். எப்போது தான் கீரமங்கலம் போலீசார் இவர்களை பிடித்து காணாமல் போன பைக்குகளை மீட்பார்களோ என்கின்றனர்.
இதே போல, கீரமங்கலம் பகுதி ஆழ்குழாய் கிணறுகளில் மின் ஒயர்கள் திருடினோம் என்று பைக் திருட்டில் சிக்கிய திருநாளூர் இளைஞர்கள் சிலர் சொன்ன பிறகும் அவர்கள் பக்கம் கூ போகவில்லை கீரமங்கலம் போலீசார். அந்த துணிச்சலில் தான் மீண்டும் கீரமங்கலம் பகுதியை சுற்றி வருகின்றனர்.