375 artists to participate in Vellore Sangamam Namma ooru Art Festival
தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு தினங்கள் நடைபெறும் ‘வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை’ கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வளர்மதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் ஆகியோர் இன்று (30-11-25) துவக்கி வைத்தனர்.
இதில், சுமார் 375 கலைஞர்கள் கலந்துகொண்டு நையாண்டி மேளம், கரகாட்டம், கணியன் கூத்து, பெரிய மேளம், மல்லர் கம்பம், கொக்கலிக்கட்டை உள்ளிட்ட ஏராளமான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அதனை ரசித்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். சிறப்பான பாரம்பரிய கலை நிகழ்ச்சி செய்தவருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow Us