வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்தானதில் 34 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து லாங் வளைகுடா பகுதிக்கு 53 சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சுற்றுலாச் சென்றனர். ஹா லாங் கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறைக்காற்றால் கனமழை பெய்தது. இதனால் படகு கடலில் கவிழ்ந்து  விபத்தானது. இந்த விபத்தில் கடலில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கடலில் விழுந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கடலில் விழுந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.