மக்களைக் காப்போம் ; தமிழகம் மீட்போம் எனும் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, 100-வது தொகுதியை எட்டியிருக்கிறார்.
கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய இந்த சுற்றுப் பயணம், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரச்சார பஸ்ஸில் இடையறாது பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சமி, இதுவரை 34 நாட்களில் 10,000 கிலோ மீட்டர் கடந்து, தினமும் சுமார் 14 மணி நேரத்தை மக்களிடையே செலவழித்துள்ளார். விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டும் தீர்வு கூறியும் வருகிறார்.
’’ஒவ்வொரு ஊரிலும், வேலைவாய்ப்பு இழப்பு, விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் ஆகியவற்றால் மக்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கண்களில் நம்பிக்கையும் தெரிகிறது. மீண்டும் அதிமுக நேர்மையான ஆட்சியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்,” என்று ஆற்காட்டில் பேசிய இபிஎஸ் சுட்டிக்காட்டினார்.
அவரது பேச்சுகள் மற்றும் சாலைப் பொதுக்கூட்டங்கள் வழியாக கோடிக்கணக்கான மக்களை எட்டியுள்ள. இந்தப் பயணம், பிற கட்சிகளில் இருந்த பெரும்பாலானோர் அதிமுகவில் சேரும் நிலையை உருவாக்கி, கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
இந்த 34 நாள் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக சாதனைகளை நினைவூட்டல்: விவசாயக் கடன் ரத்து, புயல் மற்றும் வறட்சி நிவாரணம், அம்மா உணவகங்கள், அம்மா கிளினிக், பயிர் காப்பீடு, இலவச லேப்டாப், பொங்கலுக்கு ரூ.2,500, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு.
வாக்குறுதிகளை மீண்டும் உறுதிப்படுத்தல், பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, இலவச வேட்டி சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கு காங்கிரீட் வீடுகள் என உறுதியளித்திருக்கிறார்.
மேலும், " மின் கட்டண உயர்வு, NEET விலக்கு குறித்த ரகசியம், 100 நாள் வேலைத் திட்டம் முறியடிப்பு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பரவல், விலைவாசி ஏற்றம், கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, இன்பநிதி என குடும்ப அரசியல்" ஆகியவைகளையும் வெளிப்படுத்தினார் இ.பி.எஸ்.
இது தவிர, “வரலாற்று நாயகன், சாமானிய நாயகன், தமிழ்த்தாயை காப்பாற்ற உறுதி கொண்ட மகன்” என்றெல்லாம் இபிஎஸை வர்ணிக்கும் பாடலும், சமூக ஊடகங்களில் “Bye Bye Stalin” என ஒலிக்கும் முழக்கமும் இந்த பயணத்தில் எதிரொலித்தன. ஆற்காட்டில் 100-வது தொகுதி பயணத்தை நிறைவு செய்த இபிஎஸ், “இந்த எழுச்சிப் பயணம் துவக்கம் மட்டுமே. உண்மையும், உழைப்பும், ஜெயலலிதாவின் பார்வையும் வழிகாட்டும் தமிழ்நாட்டை நாம் சேர்ந்து உருவாக்குவோம்,” என்று அழுத்தமாகசொல்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/19/eps2-2025-08-19-17-32-20.jpg)