கடலூர் அருகே செம்மகுப்பம் என்ற கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது‌.  இந்த கேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும்போது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதனால் வேனில் பயணம் செய்த மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். பின்னர் படுகாயம் அடைந்த மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் விவரம் விபத்து குறித்த விவரம் பயணம் செய்த மாணவர்களின் விவரம் குறித்துச் சரியான விவரம் தெரியவில்லை எனவும் காவல்துறை சார்பில் கூறப்படுகின்றனர்.

ரயில் மோதி பள்ளி வேனில் சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.