ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குலவிளக்கு கிராமம் மேற்கு மின்னப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் மேற்கு மின்னப்பாளையம் கவுண்டன் தோட்டம் பகுதியில் பட்டி அமைத்து 20 செம்மறி ஆடுகள் மற்றும் 5 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்த்து அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை வந்து பார்த்தபோது தெரு நாய்கள் உள்ளே புகுந்து கடித்து குதறியதில் 3 ஆடுகள் குடல் சரிந்து உயிரிழந்து கிடந்தது. மேலும் 7 குட்டிகள் படுகாயம் அடைந்து கிடந்தன. கால்நடை மருத்துவர் படுகாயமடைந்த குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

இந்த பகுதியில் தெரு நாய்கள் ஆடுகளின் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் குதறுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் பலமுறை தெரிவிக்கப்படும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.