3 people lost their lives on Another incident in Australia
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே உள்ள கடற்கரையில் ஹணுக்கா எனும் யூத பண்டிகையை கொண்டாடும் பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். இது யூதர்களின் பண்டிகை என்பதால் அங்கு 1000 க்கும் மேற்பட்ட யூதர்கள் உட்பட பொதுமக்களும் திரண்டு பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மக்கள் கூட்டத்தின் மீது இரண்டு நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, அந்நாட்டு அரசு மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. அதோடு, உரிமம் பெற்று மக்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளையும் திரும்பப் பெறவும் அந்நாட்டு அரசு முடிவு எடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லேக்கார்ஜெலிக்கோவில் சில மர்ம நபர்கள் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து, ‘லேக்கார்ஜெலிக்கோவிலிருந்து துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்த்துறை விசாரணை நடத்திவருகிறது. மர்ம நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us