போலீஸ் ஜீப் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் சித்தாப்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (25). இவருடைய மனைவி சத்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில் பிரசாத், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதுரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடன் ஈஸ்வரி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார்.

Advertisment

சிவகங்கையின் சக்குடி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த போலீஸ் வாகனம் மீது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிரசாத், சத்யா மற்றும் கைக்குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். இதுதவிர அவர்களுடன் வந்த ஈஸ்வரி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து 3 பேரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து பலியானவர்களின் உறவினர்கள் சிவகங்கை சாலையில் சாலை மறியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் வாகனத்தை ஓட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Advertisment