கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த 3 பேரும் குணா (30), சதீஷ் (20) மற்றும் கார்த்திக் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவை இருவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர் என்பதும், இந்த மூன்று பேர் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான மூன்று பேருக்கு வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூன்று பேரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்குப் பிறகு கைதான 3 பேருக்கும் வரும் 19ஆம் தேதி நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisment