'234 seats are also our target; it will take more time for the alliance' - Premalatha Vijayakanth interview Photograph: (dmdk)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.
Advertisment
ஜனவரியில் கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு இடங்களில் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''எல்லா கட்சியும் எங்களுடைய தோழமை கட்சிகள் தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இன்னைக்கு ஈவினிங் கூட நாங்க அண்ணன் ஏ.கே.மூர்த்தியுடைய மகன் ரிசப்ஷனுக்கு போறோம். அது வேற. அவங்க இன்விடேஷன் கொடுத்தாங்க நாங்க போறோம். அந்த மாதிரி இன்னைக்கு மத்திய அரசில் உள்ள எல்லாருமே தோழமை கட்சிகள். ஆனால் நீங்க சொல்ற அந்த கூட்டணி என்ற அந்த தருணம் இன்னும் தேமுதிகவுக்கு நாங்க டைம் எடுத்திருக்கோம். அது மாநாடுக்குள்ள நிச்சயம் நல்ல ஒரு முடிவு வரும். அதனால்தான் அந்த நேரத்தில் உங்களுக்கு நாங்க அறிவிக்கிறோம்''என்றார்.
Advertisment
'தேமுதிக எத்தனை இலக்கம் கொண்ட இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பதுதான் தான் எங்க டார்கெட். எங்க டார்கெட் என்னவென்று கேட்டால் அதைத்தான் சொல்லுவோம். அதனால் பொறுத்திருந்து பாருங்க. கூட்டணிக்கான பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. எல்லாரும் தோழமை கட்சிகள் தான். எங்க அம்மாவுடைய மரணத்தில நீங்க பார்த்திருப்பீங்க. பிரதமர் இரங்கல் சொன்னதில் இருந்து தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் அனைத்து பேருமே வந்தாங்க. அதை வைத்து கூட்டணி என்று சொல்ல முடியாது. அதனால் இன்னும் கூட்டணி என்ற வார்த்தையை தவிர எல்லாரும் எங்க தோழமை கட்சிகள் தான். உரிய நேரத்தில் உங்களுக்கு நாங்கள் தெளிவாக பதில் சொல்லுவோம்'' என்றார்.
Follow Us