உலகின் பல்வேறு நாடுகளிலும் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இன்று மதியம் 03:30 மணியளவில் பிறந்தது. 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக்கப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்தில் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. பட்டாசுகள் உள்ளிட்ட வான வேடிக்கைகளுடன் கூடிய உற்சாக கொண்டாட்டத்தோடு அந்நாடு மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்திய நேரப்படி மாலை 04:30 மணியளவில் நியூசிலாந்தில் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் ஆங்கிலப் புத்தாண்டு இன்று (31.12.2025) நள்ளிரவு 12 மணிக்கு நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/nz-new-year-2025-12-31-17-14-04.jpg)