2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். தேர்தல் பரப்புரைகள், சுற்றுப்பயணங்கள் என மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்றும் தொடங்கியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த கூட்டமானது நடைபெற இருக்கிறது. முதல் நாளான இன்று சென்னை மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி முடிவுகள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்கு  மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? கட்சி அடிப்படை கட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து எல்லாம் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறலாம், எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் விவாதிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.